எதனால் ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்படுகிறது? காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!

Photo of author

By Divya

எதனால் ஒவ்வாமை(அலர்ஜி) ஏற்படுகிறது? காரணங்களும் அதற்கான தீர்வுகளும்!

ஒவ்வாமை பாதிப்பால் இன்று பலர் அவதியடைந்து வருகின்றனர்.காலநிலை மாற்றத்தால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.

சிலருக்கு தூசுகளால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.சிலருக்கு பூவின் வாசனை,உணவுகள்,உட்கொள்ளும் மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படுகிறது.சிலருக்கு உலர் திராட்சை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.நம் உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத சில நிகழ்வுகள் நடக்கும் பொழுது ஒவ்வாமை ஏற்படுகிறது.

ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்புகள்:-

1.தும்மல்
2.அரிப்பு
3.மூச்சு விடுதலில் சிரமம்
4.நெஞ்சு இறுக்கம்
5.மூக்கு ஒழுகுதல்
6.இருமல்
7.கண் சிவந்து போதல்
8.மூக்கடைப்பு

ஒவ்வாமையை குணமாக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்:-

*ஆப்பிள் சீடர் வினிகர்
*தேன்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கி குடித்தால் ஒவ்வாமை நீங்கி விடும்.

*தேன்

தினமும் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சாப்பிட்டு வந்தால் அலர்ஜி பாதிப்பு குணமாகும்.

*புதினா
*தேன்

ஒரு கிளாஸ் அளவு நீரில் 5 புதினா இலைகளை போட்டு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் ஒவ்வாமை நீங்கும்.

*யூக்லிப்டஸ் ஆயில்

ஒரு கப் சூடான நீரில் 3 துளி யூக்லிப்டஸ் ஆயில் சேர்த்து ஆவி பிடித்தால் ஒவ்வாமை நீங்கும்.

*எலுமிச்சை சாறு

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் அலர்ஜி பாதிப்பு குணமாகும்.

*தேங்காய் எண்ணெய்

சரும அலர்ஜி இருப்பவர்கள் உடலில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து குளித்து வரலாம்.

*நெய்
*வெல்லம்

ஒரு தேக்கரண்டி வெல்லத்தூளில் வெதுவெதுப்பான நெய் சிறிதளவு கலந்து சாப்பிட்டால் ஒவ்வாமை குணமாகும்.