உடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.தினமும் உணவு உட்கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.நமக்கு ஆற்றல் தரும் உணவை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் அவை ஆபத்தாக மாறிவிடும்.
சிலர் மதிய நேரத்தில் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் குட்டி தூக்கம் போடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.மதிய நேரத்தில் உணவு சாப்பிட்ட பிறகு உடல் சோர்வு,மந்த உணர்வு ஏற்படுவது பொதுவான ஒரு விஷயமாக இருந்தாலும் மதிய உறக்கத்தை அனுபவித்து வருபவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் வர காரணங்கள்:
*இரவு தூக்கமின்மை பிரச்சனை
*தைராய்டு பாதிப்பு
*இரத்த சோகை
*வயது முதுமை
மதிய உறக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்:
நாம் மதிய நேரத்தில் அதிகளவு உணவு சாப்பிட்டால் உடல் சோர்வு ஏற்படும்.இதனால் வேலை மீதான நாட்டம் குறைந்து சோம்பல் ஏற்படும்.
மதியம் உணவு சாப்பிட்ட பிறகு உறங்கும் பழக்கம் இருந்தால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும்.இதனால் உடல் எடை கூடிவிடும்.
மதிய உணவு சாப்பிட்டு பிறகு உறங்கினால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.குடல் இயக்கங்கள் மோசமாகி வயிறு உப்பசம்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மதிய உறக்கத்தை கட்டுப்படுத்த வழிகள்:
வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த காய்கறி,பழங்களை சாப்பிட வேண்டும்.
உடலுக்கு தேவையான தண்ணீர் பருக வேண்டும்.இரவில் நேரமாக தூங்க பழக வேண்டும்.அதேபோல் யோகா,தியானம் போன்றவற்றை செய்தால் பகல் நேரத்தில் உடல் சோர்வாகமல் இருக்கும்.