குழந்தைகள்,வயதானவர்கள் என்று அனைவரும் தோள்பட்டை வலியை அனுபவித்து வருகின்றனர். தோள்பட்டையில் ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்வதனால் வலி ஏற்படும்.பள்ளி செல்லும் பிள்ளைகள் புத்தப்பையை முதுகில் சுமக்கின்றனர்.இதனால் தோள்பட்டை பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி மற்றும் தோள்பட்டை தேய்மானம் ஏற்படுகிறது.தோள்பட்டை வலியை கவனிக்கவிட்டால் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.
தோள்பட்டை வலி வர காரணங்கள்:
**காயம் உண்டதால்
**ஒருபக்கமாக படுத்தல்
**நரம்பு தொடர்பான பிரச்சனைகள்
**எலும்பு தேய்மானம்
**தோலில் அதிக சுமை தூக்குதல்
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – 17
2)கருப்பு உலர் திராட்சை – 15
3)கிஸ்மிஸ் பழம் – 15
4)தண்ணீர் – ஒரு கப்
தயாரிக்கும் முறை:-
கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் 17 பாதாம் பருப்பை போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 15 கருப்பு உலர் திராட்சை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் 15 கிஸ்மிஸ் பழத்தை போட்டு இரவு முழுவதும் ஊறவையுங்கள்.மறுநாள் இந்த ஊறவைத்த பொருட்களை தண்ணீருடன் மிக்சர் ஜாரில் போட்டு ஜூஸ் பதத்திற்கு மைய்ய அரைக்க வேண்டும்.
இந்த ஜூஸை குடித்து வந்தால் தோள்பட்டை வலி,எலும்பு தேய்மானமாதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
தோள்பட்டை வலியை குறைக்க வழிகள்:
1.தோள்பட்டை மீது ஐஸ்பேக் வைத்து அழுத்தம் கொடுப்பதால் வலி குறையும்.தோள்பட்டை வலியை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.
2.மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணி மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் தோள்பட்டை வலியை குறைக்கலாம்.
3.சூடான ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலியை குறைக்கலாம்.தோள்பட்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.தோள்பட்டை வலி தொடர்ந்து இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.