அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.இவருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்பே விடுதலை ஆவார் என்ற செய்தி வைரல் ஆகியது.
இவர் சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் தற்போது ஆகஸ்ட் 14ம் தேதி விடுதலையாவது தனக்கு விருப்பமில்லை என்று அவரே கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.இதற்குப் பின்னணி காரணமாக கூறப்படுவது யாதெனில் கொரோனாத் தொற்றுக் காரணமாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர் வெளியே வந்தால் இவரின் வருகையை பிரமாண்டமாக தொண்டர்கள் படை சூழ கோலாகலமாக கொண்டாட முடியாது என்ற காரணத்தால் இவர் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளி
வர மறுத்துவிட்டார் என்று கூறப்படுகின்றது.
சசிகலாவின் ஜாதக கட்டங்களில் இவர் செப்டம்பர் மாதம் வெளியே வந்தால்தான் நன்மை பயக்கும் என்று இவரின் ஜோதிடர் கணிப்பாளர் கூறியுள்ளதும் ஒரு காரணமாக கருதப்படுகின்றது.