நாம் சாப்பிடும் சத்தான காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஏகப்பட்ட சத்துக்களை கொண்டிருக்கிறது.முட்டைக்கோஸில் வைட்டமின் கே,வைட்டமின் சி,நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டைகோஸ் இலையை அரைத்து ஜூஸாக பருகினால் உடலில் பல நோய்கள் குணமாகும்.
இதில் பர்பிள் கலர் முட்டைகோஸ் இலைகளில் ஜூஸ் செய்து குடித்தால் இன்னும் நல்லது.முட்டைக்கோஸ் ஜூஸ் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முட்டைக்கோஸ் இலைச்சாறு பருகலாம்.
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாக முட்டைக்கோஸ் இலையை அரைத்து காலை நேரத்தில் ஜூஸாக செய்து பருகலாம்.உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் முட்டைக்கோஸ் இலைக்கு உண்டு.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைய முட்டைக்கோஸ் சாறு குடிக்கலாம்.
முட்டைக்கோஸ் இலை சாறு குடித்தால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.முட்டைக்கோஸில் இருக்கின்ற வைட்டமின் கே எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.முட்டைக்கோஸில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க உதவுகிறது.
உடலில் சர்க்கரை நோய்,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் குணமாக முட்டைக்கோஸ் சாறு செய்து குடிக்கலாம்.முட்டைக்கோஸில் புரதச்சத்து,வைட்டமின் சி போன்றவை நிறைந்து காணப்படுகிறது.முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முட்டைக்கோஸ் வேகவைத்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் சூடு,தலைமுடி உதிர்வு போன்ற பாதிப்புகள் குணமாகும்.முட்டைக்கோஸ் வேகவைத்த தண்ணீரை குடித்தால் இளமையாக இருக்கலாம்.முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வந்தால் சரும சுருக்கங்கள் நீங்கி இளமையாக இருக்கலாம்.உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் அகல முட்டைக்கோஸ் சாறு செய்து குடிக்கலாம்.