இதோ லிஸ்ட் ரெடி.. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டும்!! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

இதோ லிஸ்ட் ரெடி.. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டும்!! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!!

இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு என்பது இரத்த நாளங்களில் தேவைக்கு அதிகமாக இரத்தம் இருப்பது தான். இந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு நோய் அந்த காலத்தில் நூற்றில் பத்து பேருக்கு இருக்கும். அதுவும் 40 முதல் 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இந்த இரத்த கொதிப்பு அல்லது இரத்த அழுத்தம் நோய் இருக்கும். ஆனால் இன்றைய சூழல் நூற்றில் 90 பேருக்கு இரத்த கொதிப்பு நோய் இருக்கின்றது. மேலும் 20 முதல் 25 வயது உள்ள நபர்களுக்கும் இந்த இரத்த கொதிப்பு நோய் ஏற்படுகின்றது என்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது.
இந்த இரத்த கொதிப்பு நோய் வந்துவிட்டால் நாம் சமநிலையில் அதை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதாவது இரத்த அழுத்தம் அதிகமானாலோ அல்லது மிக மிக குறைந்தாலோ நம்முடைய உயிருக்கு ஆபத்தான நிலையில் முடியும். எனவே இரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் சராசரியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தம் நோய் இருப்பவர்கள் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும் சில உணவுகளை சாப்பிடலாம் என்றும் கூறுவார்கள். அந்த வகையில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்…
* இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
* ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகளை சாப்பிடலாம்.
* இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நாம் பூசணி விதைகளை சாப்பிடலாம். பூசணி விதைகளில் மெக்னீசியம், அர்ஜினைன், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
* பீன்ஸ் மற்றும் பயிறு வகைகளை சாப்பிடலாம். இது இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.
* ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி பழ வகைகளை இரத்த அழுத்தம் உள்ள நபர்களா சாப்பிடலாம். இதனால் இரத்த அழுத்தம் விரைவில் குறையும்.
* இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் பிஸ்தா பருப்பை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிஸ்தா பருப்பில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.
* இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட்டில் பினோலிக் அமிலங்களான பி-கூமரிக், காஃபிக், குளோரோஜெனிக் ஆகிய அமிலங்கள் இருக்கின்றது. இவை இரத்த நாளங்களை தளர்த்துகின்றது. அது மட்டுமில்லாமல் இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றது.