எனக்கு இமேஜ் தருவது போயஸ்கார்டன் தான்! சசிகலாவின் திடீர் போயஸ்கார்டன் கனவு!
சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் 5 வருடகாலமா சிறையில் இருந்தார்.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.இவர் வெளியே வந்ததும் பல திடுக்கிடும் பரிசுகளை தமிழக அரசாங்கம் இவருக்கு தந்தது.அது என்னவென்றல் இவரது சொத்துக்கள் பல அரசுடமை ஆக்கப்பட்டது தான்.இவ்வாறு செய்தது இவரை அரசியலினுள் நுழையக்கூடாது என்பதற்காக என பலர் பேசினர்.அதன்பின் இவர் பொதுக்கூட்டத்தில் மக்களை சந்திப்பதாக் செய்தியாளர்களிடம் கூறினார்.
மூன்று முப்பெரும் கட்சிகளால் தேர்தல் களமானது சூடு பிடிக்கும் என பலர் பேசி வந்தனர்.ஆனால் சசிகலா அனைவருக்கும் ஏமாற்றம் தரும் வகையில் நான் கட்சியை விட்டு விலகுவதாக ஓர் இரவு நேரத்தில் செய்தியாளர்களை அழைத்து திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன்பின் அவர் வழிபாடு,கோவில் என அவர் செய்த பாவத்தையெல்லாம் கழிப்பது போல ஆன்மிகத்தில் இறங்கியுள்ளார்.
தற்போது சசிகலா தி நகரில் உள்ள கிரிஷ்ணபிரியாவுக்கு சொந்தமான வீட்டில் தான் குடியிருக்கிறார்.இந்த வீடு மிகவும் சின்னதாக இருப்பதாக சசிகலா கூறினாராம்.அதனால் அவருக்கு போயஸ்கார்டனில் ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது.தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே அங்கு செல்ல வேண்டுமென்று மிகவும் மும்மரமாக உள்ளாராம்.சில நாட்கள் முன் சசிகலா இரவோடு இரவாக அந்த வீட்டின் கட்டுமான பணிகளை சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது.
சீக்கிரமாக ஏன் இந்த பணியை முடிக்க நினைக்கிறார் என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.அப்போது அவர் நினைப்பதாக சொல்வது,சசிகலாவிற்கு போயஸ்கார்டன் தான் இமேஜ் தருமாம்.அதனால் இவர் சிறையிலிருந்த போதே போயஸ்கார்டனில் வேதா இல்லத்திற்கு அருகே அதே போல ஒரு வீட்டை கட்ட இவரது குடும்பத்தினர் ஆரபித்தார்களாம்.சசிகலாவின் இமேஜ் வைத்தே அங்கு தற்போது வீடு கட்டப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.இவர் அம்மாவை போல பேர் வாங்குவதற்கும்,அம்மா எடுத்த அனைத்து முடிவுகளும் போயஸ்கார்டன் வேதா வீட்டில் தான் எடுத்தார்.அதே போல அவரும் வர நினைக்கிறார் என பலர் கூறிவருகின்றனர்.