ஆ. ராசா விவகாரத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு! நடுக்கத்தில் ராசா!

0
155

தேர்தல் தேதியை அறிவித்த பின் இருந்தே தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பு வேட்பாளர் நேர்காணல் போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறின.அதேபோல வேட்புமனுத்தாக்கல் வேட்புமனு தாக்கல் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் என்று அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறி வந்தன. அந்தவகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் வேட்புமனுத்தாக்கல் தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எந்தந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அதன்படி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பாஜகவை சார்ந்த குஷ்பூ, எல். முருகன் உள்ளிட்டோரின் தொகுதி முக்கத்துவம் பெற்றது.ஆனால் திமுக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவ்வாறு நட்சத்திர அந்தஸ்து பெற்ற அந்த தொகுதியில் தற்போது திமுக சார்பாக டாக்டர் எழிலன் போட்டியிடுவதாக தெரிகிறது.

ஆனால் ஆளும் கட்சி சார்பாக பாஜகவில் நட்சத்திர அந்தஸ்து பெற்று இருக்கும் நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் திமுக சார்பாக நட்சத்திர அந்தஸ்தில் இடம் பெறாத ஒரு வேட்பாளரை அறிவித்து இருக்கிறது இது அனைவர் மத்தியிலும் சற்று கவலையை உண்டாக்கியது.ஆனால் சமீபத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா பிரச்சாரம் மேற்கொண்ட சமயத்தில் அவர் தெரிவித்த ஒரு கருத்து தமிழகம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை அன்று ஆயிரம்விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராசா முதல்வர் மற்றும் முதல்வரின் தாயார் உள்ளிட்டோரை மிக இழிவாக பேசினார். இது தமிழகம் முழுவதிலும் பரபரப்பை உண்டாக்கியது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தார்கள் அதோடு அவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 6 கோடி நபர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருந்து வரும் முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை இவ்வாறு இழிவாக பேசுவது சரியா என்பதே அனேக மக்களின் கேள்வியாக இருந்துவருகிறது.அதோடு ஆ ராசாவின் இந்த பேச்சால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது காவல் துறை சார்பாக ராசா மீது வழக்கு பதிய தயாராக இருந்த சமயத்திலும் கூட முதல்வர் மிக நிதானமாக யோசித்து ஒரு முடிவு செய்திருக்கிறார்.

அது என்னவென்றால் ராசா மீது கைது நடவடிக்கை வேண்டாம் எதையும் பொருத்து நிதானமாக செய்வோம் என்பதாகும் அதன்படி திருவொற்றியூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு விரிவாகப் பேசியிருக்கிறார் என்பதை தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி காத்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் சாதாரண மக்கள் முதல் ஊடகங்கள் வரை அவர் என்ன செய்யப் போகிறார், என்ன சொல்லப்போகிறார், என்று மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்கள் அந்த சமயத்தில் கண்கலங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இது நன்றாக இருக்கிறதே என்று அதையே தொடர்வதாக கூறுகிறார்கள்.

அவர் இழிவாக பேசிவிட்டார் என்று இப்போது நாம் எதையாவது செய்யப் போனால் அது நம்முடைய வெற்றிக்கு பாதகம் ஆகி விடும் என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகத் தெளிவாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆகவே அவர் மிகத் தெளிவாக நின்று நிதானமாக யோசித்து ஒவ்வொரு வேலைகளையும் செய்து வருவதாக சொல்கிறார்கள்.அதாவது ராசா தெரிவித்த அந்த கருத்தையே திமுகவிற்கு எதிரான ஆயுதமாக மாற்றி அதன் மூலமாக எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தயாராகிவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறார்கள்.

ஆனால் யாராக இருந்தாலும் தன் தாயாரை இப்படி இழிவாக பேசிய ஒரு நபரை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள். இருந்தாலும் முதலமைச்சர் இந்த விஷயத்தில் இவ்வளவு பொறுமையாக இருப்பது அவருடைய வெற்றியை கருத்தில் கொண்டுதான் என்று சொல்கிறார்கள். ஆனாலும் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக அமைதியாக இருந்தாலும் கூட எதிர்காலத்தில் ராசா அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சொல்லப்படுகிறது.