நீ என்ன தேவருடைய வாரிசா? நீ திருடிய பணத்தில் வைர கவசம் இல்லையா.. ஓபிஎஸ் ஐ பந்தாடிய திண்டுக்கல் சீனிவாசன்!!
நடந்து முடிந்த முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் ஓபிஎஸ் கலந்துகொண்டு வெள்ளி கவசத்தை அளித்தது தற்பொழுது அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவானது திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் அதிமுக கழக செயலாளர் ராஜசேகரன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் மற்றும் திரைப்பட நடிகையான விந்தியாவும் பங்கேற்றார்.
மேலும் இவர்களுடன் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்பொழுது மேடையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஓபிஎஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கேட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முத்துராமலிங்க தேவருக்கு அளித்த தங்க கவசத்தை அணிய விடாமல் திமுக தடுத்து நிறுத்தியதாக கூறினார். அம்மா கொடுத்தது தெய்வீக பொன் கவசம் என்று பாராட்டினார். அதேபோல அம்மா கொடுத்த தெய்வீக பொன் கவசத்திற்கு ஈடாகுமா பன்னீர்செல்வம் அளித்த வெள்ளி கவசம் என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி இந்த வெள்ளி கவசத்தை நான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் வழங்குவதாக அந்த துரோகி சொல்லி இருக்கிறார், என்பதை ஓ பன்னீர்செல்வத்தை சுட்டிக்காட்டி பேசினார். ஓபிஎஸ் பல கோடி ரூபாயை திருடி வைத்துள்ளாரே அதை வைத்து வைர கவசம் செலுத்தலாம் ஏன் வெள்ளி கவசத்தை செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி கேவலமாக வெள்ளியில் முத்துராமலிங்க தேவருக்கு கவசம் வழங்க வேண்டும் என்று யார் உங்களிடம் கேட்டது? நீங்கள் என்ன தேவருக்கு வாரிசா என்று ஓபிஎஸ் மீது அடுக்கடுக்காக குற்றங்களை சுமத்தி பேசினார்.