ரஷ்யாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அடிபணிய காரணம் என்ன தெரியுமா?

0
188

ரஷ்யாவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாததற்கு எரிவாயு விநியோகமே காரணமாக கூறப்படுகிறது.

உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. நேரடியாக இரு தரப்பும் மோதிக்கொள்ளாமல், இடையில் உக்ரைனை வைத்துக் கொண்டு மிரட்டல்களை விடுத்து வருகின்றன. ஆனால், புலி வருகிறது கதையாக, வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் முயற்சித்து வருகின்றன. ஆனால், பொருளாதாரத் தடையைப் பற்றி ரஷ்யாவுக்கு எந்த கவலையும் இல்லை என்பதே உண்மை. காரணம், உணவு, மருந்து, ராணுவ தளவாடம் என அனைத்தும் ரஷ்யாவிடம் இருக்கும் போது, பொருளாதாரத் தடை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

இருந்தாலும், ஒருசில பாதிப்புகளை எற்படுத்தும் நிலை இருக்கும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்யா பதிலடி கொடுக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. காரணம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு வழங்குவது ரஷ்யாவே. எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தினால், ஐரோப்பிய ஒன்றியத்தில் சமையல் செய்யக்கூட முடியாத நிலை ஏற்படும். ஒருநாள் எரிவாயு கிடைக்காமல் போனால் கூட, அங்கு பொதுமக்களின் போராட்டம் வெடிக்கும். அது போருக்கு ரஷ்யா நடத்தும் போருக்கு சமமாக இருக்கும்.

இதன் காரணமாகவே, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் யோசித்து வருகிறது. அமெரிக்காவுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால், பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, எரிவாயு பிரச்சனையை சமாளிக்க கத்தார் அரசுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. ஒருவேளை, ரஷ்யா தடை விதித்தால், அதை சமாளிக்க இப்போதே முன்னேற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்து வருகிறது.

உக்ரைனை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, இப்படி ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருப்பதால், ரஷ்யா கவலைப் படாமல் அடுத்தடுத்த நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.

Previous article6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!
Next articleபாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!