புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
பிரேசில் நாட்டில் உள்ள ஷியோகிராண்ட டொசூல் என்ற மாநிலத்தில் புயலின் காரணமாக கடும் சூறாவளி காற்று வீசி மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் வீட்டுக்குள் மழை நீர் புகுவதால் அவர்கள் வெளியில் கூட செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இந்த வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 3,713 பேரை மீட்பு குழுவினர் படகு மூலம் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட நபர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
இந்த சூறாவளி புயலால் நான்கு மாத குழந்தை உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போனார்கள். அவர்களை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மீட்பு படையினர் அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த புயலால் பெரும்பாலானோர் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவிக்கின்றனர். எனவே வீடுகள் இல்லாதவர்கள் தற்காலிகமாக அருகே உள்ள விளையாட்டு மைதானங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியினர் இருக்கின்றனர். இதை பற்றி முன்பே அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் சிலர் வீட்டை விட்டு சென்றதால் அதிக அளவில் உயிரிழப்பு இல்லாமல் தடுக்க முடிந்தது.