மே 17 இயக்கத்தினருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்… கோவையில் நடந்தது என்ன.. ??

0
240
What happened in Coimbatore with the May 17 Movement?
What happened in Coimbatore with the May 17 Movement?

மே 17 இயக்கத்தினருடன் ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்… கோவையில் நடந்தது என்ன.. ??

கோவை மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இதற்காக மே 17 இயக்கத்தினர் முறையாக அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே தொகுதியில் தான் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மே 17 இயக்கத்தினர் பாஜக குறித்து விமர்சித்தும் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த பாஜகவினர் மே 17 இயக்கத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.பதிலுக்கு அவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.உடனே அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இதற்கிடையில் உரிய அனுமதி பெற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தினரின் பிரச்சாரத்தை காவல்துறையினர் பாதியிலேயே நிறுத்தினர். அதுமட்டுமின்றி மே 17 இயக்கத்தினர் அணிந்திருந்த டீ ஷர்ட்டை காவல்துறையினர் கழட்ட சொன்னதால், காவல்துறைக்கும் மே 17 இயக்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் நேற்று இரவு கோவையில் பரபரப்பு நிலவியது.

முன்னதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்று முழக்கம் எழுப்ப பதிலுக்கு மே 17 இயக்கத்தினரும் ஜெய் பீம், பெரியார் வாழ்க, தமிழ்நாடு தமிழருக்கே என்பது போன்ற முழக்கங்களை எழுப்பி அவரிகளின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Previous articleஆளுமையற்றதலைமை.. எடப்பாடி பழனிச்சாமி தலைமையை விமர்சித்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி..! 
Next articleஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயார் – இயக்குனர் அமீர்