6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Photo of author

By Parthipan K

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Parthipan K

What happened to a 6-year-old child! The people of the area are sad!

6 வயது குழந்தைக்கு நடந்த சம்பவம்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பொட்டல்குழியைச் சேர்ந்தவர் சகாய வால்டர்(43). இவர் போட்டோகிராபராக ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது குழந்தை டஸ்கின் ஜோந்த் (6). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பின் வீட்டிற்கு வந்த டஸ்கின் ஜோந்த் வீட்டிற்கு முன்னால்  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது  வீட்டிற்கு முன்னால் இருக்கும் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது அம்மாண்டிவிளையிலிருந்து திருநயினார்குறிச்சி சென்று கொண்டிருந்த  பைக் எதிர்பாராமல் டஸ்கின் ஜோந்த் மீது  மோதியது. அதில் படுகாயம் அடைந்தார்.  அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த குழந்தையை தனியார் மருத்துவமனையில்  அனுமதித்தனர்.

மேலும்  அந்த  குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டஸ்கின் ஜோந்த் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசாரிடம் புகார் தெரிவிக்கபட்டது. அந்த  புகாரின் பேரில் குழந்தையின் மீது பைக் மோதிய சின்னவிளையை சேர்ந்த பென்கர் கிரோஷியோ மீது வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடி கொண்டிருந்த குழந்தைக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.