ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரதாண்டாவ பகுதியை சேர்ந்த ஒரு பெண் மாத்துருபாய் என்பவள்,அவளுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவருக்கு அடமானமாக வைத்து மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
வெகு நாட்கள் ஆகியும் பணத்தை திரும்ப தராததால் சீனிவாச ரெட்டி பணத்தை திரும்ப கேட்க வீட்டுக்குச் சென்றார் .ஆனால் மாத்து குபாயுடம் பணம் இல்லை என்பதால் திரும்பி கொடுக்க இயலாது என கூறியுள்ளார். மாறாக சீனிவாச ரெட்டிக்கு அடமானம் வைத்த அந்நிலத்தை மார்க்கெட் விலைக்கு நீங்களே வாங்கிக் கொண்டு மீதி பணத்தை தருமாறு அப்பெண்மணி கேட்டுக்கொண்டாள்.
இதனை சாதகமாக்கிக் கொண்ட சீனிவாச ரெட்டி, அவர்களது நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டார்.
சீனிவாச ரெட்டி 3 ஏக்கர் நிலத்திற்கான பணத்தில், கடன் கொடுத்த மூன்று லட்சத்தை தவிர மீதி பணத்தை திருப்பித் தரவில்லை என்பதால் மாத்துருபாய் ஆத்திரமடைந்து தகராறு செய்தார்.
மாத்துருபாய் வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, டிராக்டரில் சீனிவாச ரெட்டி அவர்கள் செல்வதைக் கண்ட மாத்துருபாய் ,தனது பணத்தை தருமாறு கேட்டுக் கொண்டாள்.அனால் அவர் தர முன்வரவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு அதிகரித்தது.அப்போது கோபம் தலைக்கேறிய சீனிவாச ரெட்டி, டிராக்டர் வைத்து மாத்துருபாய் மீது ஏற்றி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் கொடுத்து சீனிவாச ரெட்டி கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.