ஈரோட்டில் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் ? போலீசார் வழக்கு பதிவு!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள நசியானூர் பகுதியைச் சேர்ந்தவர் போராராம்(41). இவர் நசியனூர் டவுன் பகுதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி யமாதேவி. இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் கிரண் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற கிரண் மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியான பெற்றோர் பள்ளியில் சென்று விசாரித்த போது அவர் பள்ளி முடித்து வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் பெருந்துறை போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிரணை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.