வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!

Photo of author

By Divya

வெறும் எலுமிச்சை சாறு குடித்தால் என்னாகும்? இது தெரியாம இனி யூஸ் பண்ணாதீங்க!!

Divya

வெயில் காலத்தில் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.இதில் வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.உடல் எடை இழப்பில் எலுமிச்சையின் பங்கு இன்றியமையாதது.எலுமிச்சை ஜூஸ் குடித்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.

எலுமிச்சை சாறில் இருக்கின்ற வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.சாப்பிட்ட உணவு சீக்கிரம் செரிமானமாக,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்பட எலுமிச்சை சாறு பருகலாம்.

தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சரும பிரச்சனைகளை தவிர்க்கலாம்.முகப்பர,கருவளையம்,சரும வறட்சி போன்ற பாதிப்புகள் குணமாக எலுமிச்சை சாறு பருகலாம்.உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்பு கரைய எலுமிச்சை சாறு பருகலாம்.

எலுமிச்சை சாறு குடித்தால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.எலுமிச்சை ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட எலுமிச்சை சாறு செய்து குடிக்கலாம்.எலுமிச்சை ஜூஸ் செய்து குடித்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி கட்டுப்படும்.

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் சிறந்த பானமாக எலுமிச்சை ஜூஸ் உள்ளது.எமன நிம்மதி கிடைக்க காலை நேரத்தில் எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ செய்து குடிக்கலாம்.

இத்தனைவித நன்மைகள் கொண்டிருக்கும் எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் அதிகமாக நிறைந்திருக்கிறது.வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு தண்ணீர் சேர்க்காமல் குடித்தால் வயிறு எரிச்சல் அதிகமாகும்.அதேபோல் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை சாறு பருகுவதை தவிர்க்க வேண்டும்.

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு பருகினால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.எலுமிச்சையின் அமில அளவு குறைய ஒரு எலுமிச்சம் பழச்சாறுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி பருக வேண்டும்.