இதை தூங்கும் நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?!
இந்திய மசாலா பொருட்களில் ஏலக்காய்க்கு என மிக முக்கிய இடம் உண்டு. சுவையும் மணமும் கொண்ட இந்த மசாலா பொருளில் எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளன.
மேலும், இவை நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது.ஏலக்காயில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நியாசின் போன்றவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி படைத்தவையாக உள்ளன
நம்முடைய பகுதிகளில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, இனிப்பு வகைகள் செய்வதற்கும், பால் பொருட்களில் சேர்க்கவும், தேநீர், காபி, கேக் வகைகள், பிரெட் ஆகியவற்றைத் தயார் செய்வதிலும் இவற்றை நாம் அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.
ஏலக்காய் சளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்தாக உள்ளது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும். இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காயை போட்டு சாப்பிட்டு வந்தால் சுகமான தூக்கம் வரும்.பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுக்கு ஏலக்காய் சூப்பர் மருந்தாகும்.
ஏனெனில் ஏலக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சாறுகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், ஆஸ்துமா இருக்கும் நோயாளிகளுக்கு இது அற்புத பயனைத் தருகிறது.
ஏலக்காய் விதைகளில் இருக்கும், அதிக அளவிலான நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, ஆகியவற்றுக்கும் இவை சிறந்த தீர்வைத் தருகிறது.