பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்!

Photo of author

By Parthipan K

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்!

Parthipan K

What husband and wife did at the bus station! Knocked off police!

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்!

ஈரோடு மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலின் பேரில்  போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகக்கும்படியாக தம்பதி ஒன்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அழைத்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். அதனால் சந்தேகம் அடைந்த போலீசர்கள் அவர்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை செய்து பார்த்தாக அதில் ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவர்களை விசாரித்த போது அந்தியூர்  ஊர் பகுதியை சேர்ந்த ராமநாதன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார்  இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில்  அவர்கள் சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீசார் தீவிரல் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.