உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

0
1756

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

நமது வீட்டின் அருகில் இயற்கையாகவே பறவைகள் பூச்சி போன்றவைகள் வந்து செல்லும். ஆனால் ஒரு சில பறவைகள் அல்லது பூச்சிகள் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் அல்லது கெடுதல் நடக்க இருப்பதை முன்கூட்டியே நமக்கு உணர்த்த வருகின்றது என முன்னோர்கள் கூறுவார்கள். மேலும் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வருவதைக் கண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவி வீட்டுக்குள் வருவதால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

மேலும் ஆந்தை என்றாலே அனைவரின் மனதிலும் ஒரு அச்சம் தோன்றும். ஆனால் ஆந்தை என்பது லட்சுமி தேவியின் அருகில் இருக்கும் ஒரு உயிரினமாகும். வட மாநிலங்களில் லட்சுமிதேவியின் வாகனமாக ஆந்தை தான் இருக்கின்றது. இத்தகைய ஆந்தை வீட்டிற்குள் நுழைந்தால் மாபெரும் அதிர்ஷ்டம் உண்டாகும். பொன்வண்டு,வண்ணத்துப்பூச்சி,கிளி, குளவி தட்டான் போன்றவைகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். உங்கள் வீட்டில் பல்லி இல்லை என்றால் பணம் கரைந்து கொண்டே இருக்கும். வீட்டின் அலை மாறிக்கு பின்னால் பல்லி இருந்தால் செல்வம் சேரும்.

புறா உங்கள் வீட்டிற்குள் வருவதால் அதிர்ஷ்டம் ஏற்படும். வீடு தேடி காகம் வந்தால் அதற்கு உடனே உணவளிக்க வேண்டும். நல்ல செய்தி உங்களை தேடி வரும் என அர்த்தம். காலையில் எழுந்தவுடன் காகையின் சத்தம் கேட்டால் அன்று நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். தேள் வீட்டிற்குள் நுழைவதால் கஷ்டம் ஏற்படும். குரங்குகள் வீட்டிற்குள் நுழைவதன் மூலமும் எதிரிகள் அதிகரிப்பார்கள். கரையான் வீட்டிற்குள் நுழைந்தால் கஷ்டம் ஏற்படும்.

Previous articleகொசுவை விரட்டியடிக்க இயற்கையான வழிமுறை! உடலுக்கு எந்த திங்குமில்லை!
Next article3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதம் கர்ப்பமாவது உறுதி!