நெருப்பு பட்டு புண்ணாகிடுச்சா? தரையில் படர்ந்து கிடக்கும் இந்த செடியை அரைத்து பூசினால் புண்கள் ஆறும்!!

Photo of author

By Divya

நெருப்பு பட்டு புண்ணாகிடுச்சா? தரையில் படர்ந்து கிடக்கும் இந்த செடியை அரைத்து பூசினால் புண்கள் ஆறும்!!

Divya

பெரும்பாலும் சமைக்கும் பொழுது தான் நமக்கு தீக்காய புண்கள் ஏற்படுகிறது.சூடான எண்ணெய் படுதல்,சூடான சமையல் பாத்திரத்தில் தொடுதல் போன்ற காரணங்களால் தீக்காயங்கள் ஏற்படுகிறது.இந்த புண்களை விரைவில் குணப்படுத்த இங்கு தரப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.

1)அவரை இலை – பத்து
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
3)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

மிக்சர் ஜாரில் பத்து அவரை இலையை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பேஸ்ட்டில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து தீக்காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.

1)நாயுருவி செடி – சிறிதளவு
2)தண்ணீர் – தேவையான அளவு

மிக்சர் ஜாரில் நாயுருவி செடியை போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை தீக்காயங்கள் மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.

1)அவுரி இலை – கால் கைப்பிடி
2)வெற்றிலை – ஒன்று

அவுரி இலை மற்றும் வெற்றிலையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தீக்காயங்கள் மீது பூசி வந்தால் புண்கள் ஆறிவிடும்.

1)வேப்பிலை – ஒரு கொத்து
2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து தீக்காயங்கள் மீது அப்ளை செய்தால் புண்கள் ஆறிவிடும்.

1)துலுக்க சாமந்தி இலை – சிறிதளவு
2)பருப்பு கீரை இலை – சிறிதளவு

இந்த இரண்டு இலைகளையும் எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு உரல் அல்லது மிக்சர் ஜாரில் இந்த இலைகளை போட்டு தண்ணீர் விட்டு அரைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் புண்கள் சில தினங்களில் ஆறிவிடும்.

1)வேப்பம்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – கால் கிளாஸ்

வேப்பம்பட்டையை பொடித்து பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த நீரை ஆறவைத்து தீக்காயங்கள் மீது ஊற்றினால் புண்கள்,தண்ணீர் கொப்பளங்கள் ஆறிவிடும்.

1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – தேவையான அளவு

தீக்காய கொப்பளத்தில் வரும் தண்ணீரை பருத்தி துணி கொண்டு துடைத்துவிடுங்கள்.பிறகு தண்ணீர் கொண்டு கொப்பளத்தை சுத்தம் செய்யுங்கள்.

அதன் பிறகு ஒரு கற்றாழை துண்டில் இருந்து ஜெல் எடுத்து தீக்காய கொப்பளங்கள் மீது அப்ளை செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து சில தினங்கள் செய்து வந்தால் தீக்காய புண்கள் ஆறும்.