சினிமாவில் சேரவில்லை என்றால் என்ன.. அரசியலில் இணைவோம்!! தவெக-வில் வெற்றிமாறன்!!

0
7
What if we don't join cinema.. let's join politics!! Daveka-Vil Victor Maran!!
What if we don't join cinema.. let's join politics!! Daveka-Vil Victor Maran!!

நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கி ஓராண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய கட்சி கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஓராண்டு நிறைவு விழாவை துவங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டு வெற்றி தொடக்கத்தினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அழகர் கோவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயமானது நடத்தப்பட்டிருக்கிறது. இந்த மாட்டு பந்தயமானது பெரிய மாடு சிறிய மாடு என இரண்டு பிரிவாக மதுரை மாவட்ட கழக செயலாளர் விஜய் நண்பன் தலைமையில் நடத்தப்பட்டிருக்கிறது.

அதில் குறிப்பாக இந்த இரட்டை மாட்டு வண்டி இல்கை பந்தயத்திற்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் வந்திருப்பது தமிழக வெற்றிக் கழகத்திற்கு அவர் துணை நிற்பது போல் அமைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

திமுகவின் மீது அதிருப்தியில் இருக்கக்கூடிய வெற்றிமாறன் அவர்கள் தற்பொழுது தமிழக வெற்றிக்கழகத்திற்கு துணை நிற்பது சீக்கிரமாக இந்த கட்சியில் சேர்வதற்கான அறிகுறி என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாது, சினிமாவில் விஜய் மற்றும் வெற்றிமாறன் என்னுடைய கூட்டணி கிடைக்கவில்லை என்றாலும் இனி அரசியலில் அதனை எதிர்பார்க்க முடியும் என்றும் கருத்துக்கணிப்புகள் நிகழ்கின்றன.

Previous articleதமிழகத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசு நடத்தும் திடீர் தேர்வு!! எதற்கு தெரியுமா?
Next articleWhatsapp க்கான கடைசி தேதி அறிவிப்பு!! அதிர்ச்சியில் பயனர்கள்!!