தினசரி வாழ்வில் பெரும்பாலனோர் தலைவலி பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.மன அழுத்தம்,பணிச்சுமை,உடல் நலப் பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி பாதிப்பு ஏற்படுகிறது.
தலைவலி என்பது பொதுவானசொல்.ஆனால் இதில் பல வகைகள் இருக்கின்றது.ஒற்றைத் தலைவலி,நாள்பட்ட தலைவலி,பின்பக்க தலைவலி,சாதாரண தலைவலி,கொத்து தலைவலி,கிளஸ்டர் தலைவலி,இரண்டாம் நிலை தலைவலி என்று தலைவலி வகைகள் வித விதமாக இருக்கிறது.
இதில் திடீரென்று ஏற்படும் ஆபத்தான தலைவலி பாதிப்பு கடுமையானதாக இருக்கும்.இந்த தலைவலி தலையில் இடி முழக்கம் ஏற்படுவது போன்று இருக்கும்.சாதாரண தலைவலியை விட இந்த ஆபத்தான தலைவலி ஏற்பட்டால் அதன் வலியை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
ஆபத்தான தலைவலியின் அறிகுறிகள்:
1)மயக்கம்
2)காய்ச்சல்
3)வாந்தி
4)கண் பார்வை குறைபாடு
5)கை மற்றும் கால்களில் வலி ஏற்படுதல்
6)பேசுவதில் சிரமத்தை சந்தித்தல்
இந்த அறிகுறியுள்ள தலைவலி உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது முக்கியம்.ஆபத்தான தலைவலி இருந்தால் அது மூளை சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.
மூளையில் கட்டி,மூளையை சுற்றி இரத்தப் போக்கு,மூளை காய்ச்சல் பாதிப்பு இருந்தால் இதுபோன்ற ஆபத்தான தலைவலி ஏற்படும்.உங்களுக்கு வழக்கமான தலைவலி பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவை சரியாகவில்லை என்றால் பாதிப்பு தீவிரமாகும்.
தலைவலி வகைகள் மற்றும் காரணங்கள்:
உங்களுக்கு நெற்றி பகுதியில் தலைவலி இருந்தால் அவை மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை போன்ற காரணங்களால் ஏற்படக் கூடிய பாதிப்பாக இருக்கும்.
பின்பக்க மண்டையில் தலைவலி இருந்தால் முதுகெலும்பு பிரச்சனையாக இருக்கக் கூடும்.இடது பக்க தலையில் வலி ஏற்பட்டால் அவை இருதய அழுத்தத்தின் காரணமாக ஏற்படலாம்.தலைமேல் வலி இருந்தால் அவை உடல் சோர்வு காரணமாக ஏற்படாமல்.இதில் இடி தலைவலி ஆபத்தான தலைவலியாக பார்க்கப்படுகிறது.
இந்த தலைவலி பாதிப்பு இருப்பவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.