நமது உடலில் உள்ள குடல்வாலில் ஏற்படும் வீக்கத்தை தான் குடல்வால் அலர்ஜி என்கின்றோம்.இந்த குடல்வால் பெருங்குடலின் முன் பகுதியில் உள்ளது.இந்த குடல்வால் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பில் இருக்கிறது.
இந்த குடல்வால் உடலில் நோய்களை எதிர்த்து போராடுகிறது.நமக்கு வயதாகும் போது இந்த குடல்வாலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் பொழுது சீழ் மற்றும் வீக்கம் உண்டாகிறது.இதனால் அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் மற்றும் வலி ஏற்படும்.உலகளவில் 100க்கு 9 பேர் இந்த குடல்வால் அலர்ஜியை சந்திக்கின்றனர்.
குடல்வால் அலர்ஜி அறிகுறிகள்:
**பசியின்மை
**வாந்தி
**காய்ச்சல்
**தொப்புள் பகுதியில் வலி
**வலது பக்க வலி
**குமட்டல்
**கடுமையான வயிற்று வலி
குடல்வால் அலர்ஜி காரணங்கள்:
**குடல்வால் அடைப்பு
**குடல்வால் தொற்று
**பாக்டீரியா தொற்று
குடல்வால் வெடிப்பு என்றால் என்ன?
குடல்வாலில் வீக்கம் ஏற்படும் பொழுது அது வயிற்றை சுற்றி பரவுகிறது.இந்த குடல்வால் வெடித்தால் தொடர்ச்சியான வயிற்றுவலி மற்றும் அடிவயிறு வீக்கம் ஏற்படும்.இந்த குடல்வால் அலர்ஜி 30 வயதிற்குள் இருப்பவர்களையே அதிகம் பாதிக்கிறது.
இந்த குடல் வெடித்தால் பாக்டீரியா தொற்றுகள் அடிவயிற்றுப் பகுதியில் பரவி உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த குடல்வால் அலர்ஜியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம்.
குடல்வால் அலர்ஜி ஏற்பட்டால் திடீரென்று தாங்க முடியாத வயிற்று வலியை அனுபவிக்க நேரிடும்.நடக்கும் பொழுது மிகுந்த அசௌகரியத்தை சந்திக்க நேரிடும்.இதனோடு வாந்தி,குமட்டல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.இரண்டு வகையான குடல்வால் அலர்ஜி உள்ளது.
1)கடுமையான குடல்வால் அலர்ஜி
2)நாள்பட்ட குடல்வால் அலர்ஜி
இந்த குடல்வால் அலர்ஜி பிரச்சனையை பெரும்பாலும் ஆண்களே எதிர்கொள்கின்றனர்.குடல்வால் அலர்ஜியின் ஆரம்ப கால அறிகுறிகள் வாந்தி மற்றும் குமட்டல் ஆகும்.அவை தவிரமாகும் போது அடிவயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.குடல்வால் அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பிரச்சனை இருப்பவர்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது முக்கியம்.