என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

Photo of author

By Divya

என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

Divya

உங்களில் பெரும்பாலானவர்கள் காலையில் குளியல் போட்டுவிட்டு தான் மற்ற வேலைகளை செய்வீர்கள்.அலுவலகம் செல்பவர்கள்,பள்ள கல்லூரிக்கு செல்பவர்கள் என்று அனைவரும் காலை குளியலை கடைபிடிக்கின்றனர்.

காலையில் குளிப்பதால் உடலுக்கு ஒருவித புத்துணர்வு கிடைக்கும் என்பது அனைவராலும் நம்பப்படும் உண்மை.உடலில் சேரும் அழுக்கு,வியர்வை,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்களை வெளியேற்ற குளிக்கிறோம்.நம் வழக்கத்தில் ஒன்றாக மாறிப்போன காலை குளியல் ஒரு தவறான பழக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காலையில் குளிப்பதை காட்டிலும் மாலை அல்லது இரவு நேரத்தில் குளித்தால் உடல் புத்துணர்வு அதிகமாகும்.காலையில் குளிப்பதால் எந்த பலனும் கிடைக்காது என்று ஆராய்ச்சி சொல்கிறது.இரவில் உறங்க செல்வதற்கு முன் குளித்தால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அகலும்.வெளியில் சென்று வந்த பின்னர் குளித்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அகலும்.காலையில் எழுந்த பிறகு குளிப்பது நமது உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்றாலும் இரவு அல்லது மாலை நேரத்தில் குளித்தால் மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டும் புத்துணர்வுடன் இருக்கும்.

இரவில் குளித்தால் உடல் சூடு தணியும்.சருமத்தில் ஈரப்பதம் தக்கவைப்படும்.இரவில் குளிப்பதால் நல்ல தூக்கத்தை பெற முடியும்.பகலில் குளிப்பதை காட்டிலும் இரவு குளியல் அதிக பலன்களை நமக்கு தருகிறது.இரவில் குளிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.

மேலும் குளிப்பதற்கு முன்னர் தலைக்கு சிறிது எண்ணெய் வைத்து மசாஜ் செய்த பிறகு குளித்தால் உடல்சூடு முழுமையாக குறைந்துவிடும்.இது தவிர தலை முடி சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.காலை குளியலை தவிர்க்க முடியவில்லை என்றாலும் மாலை அல்லது இரவு நேர குளியலையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள்.