அது என்ன “நான் ஆணையிட்டால்”..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..!

0
395
#image_title

அது என்ன “நான் ஆணையிட்டால்”..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..!

‘எங்க வீட்டு பிள்ளை’ என்று சொன்னால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் தான். இந்த படம் உருவான போது எம்ஜிஆர் திமுகவை சேர்ந்த ஒரு நடிகராக இருந்தார். அந்த சமயம் திமுக ஆட்சியில் இல்லை.

இன்று வரை உணர்ச்சி மிகுந்த பாடலாக ஒலித்து கொண்டிருக்கும் ‘நான் ஆணையிட்டால்’ உருவான பின் புலம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

நாம் எல்லோரும் பாடி கொண்டிருக்கும் ‘நான் ஆணையிட்டால்’ என்று தொடங்கும் பாடலின் முதல் வரியே மாற்றியமைக்கப்பட்டவை தானாம்.

கவிஞர் வாலி முதலில் ‘நான் அரசன் என்றால்.. என் ஆட்சி என்றால்.. இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்..’ என்று தொடங்கும் வரிகளோடு தான் பாட்டை எழுதி முடித்து இருக்கிறார்.

இந்த வரிகள் பாடலாக உருவாக்கப்பட்ட பின்னர் வாலியை நோக்கி கேள்விகள் எழத் தொடங்கின. ‘நான் அரசன் என்றால்.. என் ஆட்சி என்றால்’ இந்த வரிகளை சென்சார் போர்டு ஏற்றுக் கொள்ளாது என்று சிலர் சொல்ல உடனே எம்ஜிஆரிடம் சென்று ‘அண்ணா’, ‘நான் அரசன் என்றால்.. என் ஆட்சி என்றால்’ என்ற வரியை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன என்று கேட்கிறார்.

அதற்கு எம்ஜிஆர் சென்சார் அமைச்சராக இருந்தால் நானும் அதை தான் செய்திருப்பேன் வாலி. பாடல் வரிகளை மாற்றி எடுத்து வா.. சொல்லவே பின்னர் “நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்..” என்று மாற்றி அமைத்து எம்ஜிஆரிடம் பாடல் வரிகளை காண்பித்து இருக்கிறார்.

அது என்ன வலி ‘நான் ஆணையிட்டால்’ என்று எம்ஜிஆர் கேட்க, ‘அண்ணா’ அது ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் கட்சி கூட்டத்தில் “நான் ஆணையிட்டால் ரயில் ஓடாது” என்று தெரிவித்தது நியாபகம் வந்தது.

அந்த ‘நான் ஆணையிட்டால்’ என்ற வரி இந்த பாடலுக்கு செட் ஆகும் என்பதனால் வைத்தேன் என்று சொல்லி ஒருவழியாக அந்த பாடல் உருவான பின்னர் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியது. ‘ஒரு தலைவன் உண்டு.. அவன் கொள்கை உண்டு..’ என்ற நீங்கி ‘ஒரு கடவுள் உண்டு.. அவன் கொள்கை உண்டு..’ என்ற வரிகள் இணைந்தது. இவ்வாறு பலகட்டங்களை தாண்டி தான் ‘நான் ஆணையிட்டால்’ பாடல் இன்று வரை கம்பீரமாக ஒலித்து கொண்டிருக்கிறது.

Previous articleசம்பளத்தை திருப்பி கொடுத்தாரா K.R விஜயா ! ஏன்?
Next articleஏன்? கொக்ககோலா நிறுவனத்தில் விஜயகாந்த் நடிக்கவில்லை?