உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கின்றது.உடல் பாகங்கள் சீராக இயங்க,உடல் கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்ற உடற்பயிற்சி உதவுகிறது.
உடற்பயிற்சி செய்வதால் உடல் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக உடற்பயிற்சி திகழ்கிறது.உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது.உடற்பயிற்சி பல வித நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது முற்றிலும் கட்டுப்படும்.ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
மன அழுத்தம்,மன உளைச்சல் சரியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது முக்கியம்.மூளை புத்துணர்வுடன் செயல்பட உடற்பயிற்சி முக்கியமான ஒன்றாகும்.உடற்பயிற்சி செய்வதால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.உடல் மற்றும் மனம் வலிமையாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.இத்தனை நன்மைகளை கொண்டிருக்கும் உடற்பயிற்சியை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உணவு உட்கொள்வதற்கு முன் உடற்பயிற்சி செய்வதால் உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.சர்க்கரை நோய்,இரத்த கொதிப்பு,உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை’கட்டுப்பாட்டில் வைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது முக்கியம்.உணவு உட்கொள்வதற்கு முன் உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலிமையாக இருக்கும்.
அதேபோல் உணவு உட்கொண்ட பிறகு நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.உடலில் கலோரி சேர்வது கட்டுப்படும்.உணவு உட்கொண்ட பிறகு நடைபயிற்சி மேற்கொண்டால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் உணவு உட்கொண்ட பின்னர் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் எலும்புகள் வலிமையாக இருக்கும்.