அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதனை 1 முறை சாப்பிடுங்கள் வாழ்நாள் முழுவதும் தொல்லை இருக்காது!!

Photo of author

By Rupa

வயிற்றில் உள்ள சிறுகுடலின் மேல் பகுதியில் அல்சர் புண்கள் உருவாகிறது.இந்த வயிற்றுப்புண் பாதிப்பால் அவதியுறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

அல்சர் அறிகுறிகள்:

*வயிற்றுவலி
*ஏப்பம்
*வயிறு வீக்கம்
*வயிறு எரிச்சல்
*மலம் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு
*நெஞ்செரிச்சல்
*குமட்டல்

அல்சர் புண்கள் வயிற்றுப்பகுதியில் மட்டும் அல்ல வாய்ப்பகுதியிலும் உருவாகிறது.இந்த அல்சர் புண்கள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:

1)மலை நெல்லிக்காய்

2)தான்றிக்காய்

3)கடுக்காய்

செய்முறை:

முதலில் ஒரு கப் அளவு மலை நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு காட்டன் துணியில் பரப்பி விடவும்.அதன் விதையை அப்புறப்படுத்தி விடவும்.

அடுத்து நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் தான்றிக்காய் மற்றும் கடுக்காய் 50 கிராம் அளவிற்கு வாங்கி ஒருமுறை வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும்.

நெல்லிக்காய் வற்றல் பதத்திற்கு வந்ததும் இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.

இந்த பவுடரை 15 கிராம் அளவிற்கு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலக்கி குடித்து வந்தால் வாய்ப்புண் மற்றும் அல்சர் புண் ஆறும்.

அல்சர் குணமாக மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:

1)வெந்தயம்
2)தயிர்

செய்முறை:

ஒரு கப் பசுந் தயிர் எடுத்துக் கொள்ளவும்.கடைகளில் விற்க கூடிய தயிர் பயன்படுத்த வேண்டாம்.பிறகு அரை தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.இந்த வெந்தயத் தூளை தயிரில் போட்டு சாப்பிட்டால் வாய்ப்புண்,அல்சர்,வயிறு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.