கிரிக்கெட் துறையில் உள்ள அனைத்து பட்டியலிலும் முதன்மை இடம் வகிக்கக்கூடிய சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 2025 இல் நடக்கவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டு தொடரில் 30 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் இளம் ஆல் ரவுண்டர் மட்டுமில்லாமல் இவர் சிறந்த கிரிக்கெட் பிளேயரான சச்சினனுடைய மகன் ஆவார். இவரை ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் வாங்காமல் இறுதிக்கட்ட வீரராக வைத்ததற்கு இவருடைய செயல்திறன் தான் காரணமாக இருந்துள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கர் ஐந்து ஐபிஎல் போட்டிகளில் 10 என்ற எக்கனாமி ரேட்டில் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் தான் இவரால் இந்த சீசனில் மும்பைக்கு விளையாட முடியாமல் போய் உள்ளது.
விளையாட்டை பொருத்தவரை திறமை தான் முக்கியம் என்ற நோக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது, தமிழ்நாட்டினுடைய அரசியல் ஆனது இதற்கு அப்படியே நேர் எதிராக உள்ளது.
தற்பொழுது நம்மை ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்ற கழகமானது இந்த வாரிசு அரசியலை பின்பற்றி வருகிறது. கலைஞர் கருணாநிதி அவரின் பின் அவருடைய மகனான மு க ஸ்டாலின் அவரின் பின் அவருடைய மகனான உதயாநிதி ஸ்டாலின் என திறமைக்கு முக்கியத்துவம் இன்றி வாரிசுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது முதலமைச்சராகவும் உள்ள மு.க ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய 14 வயதில் முரசொலி மாறனுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி இன்று தமிழகத்தின் முதல்வராக தன்னுடைய நிலையை உயர்த்திக் கொண்டுள்ளார்.
ஆனால், துறை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 2018 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்து அதன் பின் 2019 ஆம் ஆண்டு இளைஞர் அணியின் செயலாளராக பொறுப்பேற்றார். மேலும் இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பின் தற்பொழுது படிப்படியாக முன்னேறி தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் தன் தந்தையின் பிறகு அடுத்த முதல்வராகவும் வாரிசு அரசியலினை பயன்படுத்தி நுழைய இருப்பது பலரிடையே கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.