இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?

0
153

இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன??

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அனைத்து மக்களும் மிதிவண்டியை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மிதிவண்டி காணாமல் போகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக சில முழக்கங்களையும் எழுப்பினர். கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டை அடித்து நொறுக்கினர்.

கற்களை கொண்டு வீசினர். அவர் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகள் தூள் தூளாக நொறுங்கியது. போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா முன்கூட்டியே தனது குடும்பத்துடன் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இலங்கையுடன்அமெரிக்கா துணை நிற்பதாக அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் நடந்து வரும் அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா ஃபாலோ பண்ணி வருகிறது. இலங்கையின் வரலாற்றில் பலவீனமான இந்த தருணத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி கூறுகின்றோம். இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன் நீண்ட கால பொருளாதாரம் கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.  மேலும் இப்போராட்டத்திற்கான தீர்வை சீக்கிரம் முடிவடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

Previous articleசெவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்!
Next articleஎடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளரா? அல்லது இடைக்கால பொதுச் செயலாளரா? தொடங்கியது பொதுக்குழு கூட்டம்!