நம் உடலில் படியும் அழுக்குகள்,வியர்வை நாற்றங்களை வெளியேற்ற குளியல் போடுகின்றோம்.குளிப்பதால் உடலுக்கு பபுத்துணர்வு கிடைக்கின்றது.காலை எழுந்த பின்னரும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னரும் குளிக்க வேண்டும்.ஆனால் இன்றைய அவசர காலத்தில் நாளொன்றில் ஒருமுறை மட்டும் குளிப்பதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது ஷாம்பு,சோப் என்று எல்லாமே ரசாயனங்களாகிவிட்டது.தினமும் கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் எண்ணெய் குளியலை மட்டுமே மேற்கொண்டனர்.கெமிக்கல் பொருட்கள் நம் சருமத்திற்கு ஆபத்தானது.அதேபோல் உடல் சூட்டையும் அதிகரித்துவிடும்.
ஆனால் எண்ணெய் குளியல் போட்டால் உடல் சூடு தணிவதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும்.குளிப்பதற்கு முன்னர் தலை,தொப்புள்,உள்ளங்கை,உள்ளங்கால் ஆகியவற்றிற்கு எண்ணெய் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வெந்நீரில் குளியல் போட வேண்டும்.இப்படி குளித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.சரும பிரச்சனைகள் எதுவும் வராமல் இருக்கும்.நல்லெண்ணெயை சருமத்திற்கு அப்ளை செய்தால் அழுக்குகள் நீங்குவதோடு ஒருவித பொலிவு கிடைக்கும்.தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளித்தால் கண் எரிச்சல்,கண் சூடு தணியும்.உடல் நரம்புகள் வலிமை பெறும்.நல்லெண்ணெய் குளியல் தசைகளை வலிமைப்படுத்தும்.
அதேபோல் குளிக்கும் பொழுது முதலில் கால் பாதங்களை தண்ணீரில் நினைக்க வேண்டும்.அதன் பிறகு கீழிருந்து மேலாக தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும்.இப்படி குளித்தால் உடல் சூடு மொத்தமாக குறைந்துவிடும்.