என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

Photo of author

By Parthipan K

என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

Parthipan K

What is this? A test for liquor lovers!..Tasmak shops will not work on this day? District Collector orders..

என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

நமது நாட்டில் வருகின்ற 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி 15ஆம் தேதி நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற அரசு சார்ந்த நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அதன்படி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையிலுள்ள மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது,வருகின்ற 15ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது.இதையும் மீறி மதுபான கடை செயல் பட்டால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அறிந்த மது பிரியர்கள் முன் கூட்டியே மதுபானம் வாங்கி செல்கிறார்களாம்.