கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!!

0
139
#image_title

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே!!! சூப்பர் 4 சுற்றுக்கான தகுதியை இழந்த ஆப்கானிஸ்தான் அணி!!!

நேற்று(செப்டம்பர்5) நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் குறிப்பிட்ட பந்துகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தால் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி எதிர்பாரத விதமாக அந்த போட்டியில் தோல்வியடைந்து நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடரில் நேற்று(செப்டம்பர்5) நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து பேட் செய்தது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மென்டிஸ் அரைசதம் அடித்து 92 ரன்கள் சேர்த்தார். பதும் நிசன்கா 41 ரன்களும், அசலன்கா 36 ரன்களும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணியில் குல்பதின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும் முஜீப் உர் ரஹ்மான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 292 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் 292 ரன்களை 37.1 ஓவரில் எடுக்ங வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. அதற்கு தகுந்தது போலவே ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக விளையாடிவந்தது. ஏற்கனவே எட்டு விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசி ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஜீப் உர் ரஹ்மான் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டது. இருந்தும் கடைசி பந்திற்கு அடுத்த பந்தில் சிக்சர் அல்லது பவுண்டரி அடித்தால் ஒரு வாய்ப்பு இருந்த நிலையில் அந்த பந்தில் அணியின் 10வது பேட்ஸ்மேன் சிக்சர் அல்லது பவுண்டரி அடிக்காமல் டாட் வைத்தார். மேலும் அடுத்த பந்தில் 10வது பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் குரூப் பி பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொள்கின்றது. இன்று(செப்டம்பர்6) நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.

Previous articleநின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!
Next articleபொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போ தீபாவளிக்கு இல்லையா!!!