மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் பக்கவாத பிரச்சனை உண்டாகிறது.இந்த பக்கவாதத்தால் மூளையில் இருக்கின்ற செல்கள் மெல்ல மெல்ல இறக்க தொடங்குகிறது.பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம்.யாருக்கு பக்கவாதம் வரும் என்றே சொல்ல முடியாது.
பக்கவாத அறிகுறிகள்:-
1)பேச்சில் தெளிவின்மை
2)கை மற்றும் கால்களில் உணர்வின்மை பிரச்சனை
3)கை,கால் பலவீனமாக இருத்தல்
4)கண் பார்வை பிரச்சனை
5)திடீர் தலைவலி
6)உடல் இயக்கத்தில் சிரமம்
7)குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு
பக்கவாதம் வர காரணங்கள்:-
1)சர்க்கரை அளவு அதிகரிப்பு
2)மதுப் பழக்கம்
3)புகைப்பழக்கம்
4)பரம்பரைத் தன்மை
5)இதயம் தொடர்பான நோய் பாதிப்பு
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.பக்கவாத பிரச்சனையை அலட்சியமாக கருத முடியாது.பக்கவாதத்திற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
அதேபோல் பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க சில ஆரோக்கிய உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.
பக்கவாதத்தை தடுக்கும் உணவுகள்:-
1.புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்,அவகேடோ போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
2.முழு தானிய உணவுகளை சாப்பிட வேண்டும்.உலர் விதைகள் மற்றும் பருப்பு உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
4.பயறு வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.பீன்ஸ்,கருப்பு சுண்டல்,மொச்சை போன்ற பயறு வகைகளை வேகவைத்து தாளித்து சாப்பிடலாம்.
5.பாதாம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா போன்ற உலர் விதைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
பக்கவாத பாதிப்பை அதிகப்படுத்தும் உணவுகள்:
சாப்பிடும் உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.பதப்படுத்திய உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.கோழி,மீன்,ஆட்டிறைச்சி,முட்டை,கீரைகள் மற்றும் அரிசி உணவுகளை பதப்படுத்தி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பக்கவாதம் வந்தவர்களுக்கு மீண்டும் பக்கவாத பாதிப்பு ஏற்பட இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளே காரணமாக உள்ளது.