என்ன இட்லி தோசை சாப்ட்டா.. மூட்டு வலி முதுகுவலி வருமா? இதற்கு பிராய்லர் சிக்கன் தான் ஓரே தீர்வா?

Photo of author

By Divya

என்ன இட்லி தோசை சாப்ட்டா.. மூட்டு வலி முதுகுவலி வருமா? இதற்கு பிராய்லர் சிக்கன் தான் ஓரே தீர்வா?

Divya

இன்று பலரும் புரதச்சத்து குறைபாட்டை சந்தித்து வருகின்றனர்.நாம் உண்ணும் உணவின் மூலம் புரதம் கிடைக்கிறது.ஒருவேளை நாம் புரத உணவுகளை சாப்பிடவில்லை என்றால் நமது எலும்புகள் வலிமை இழந்து மூட்டு வலி,முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நம் உடலுக்கு தேவைப்படும் அடிப்படை சத்துக்களில் ஒன்று புரதம்.நாம் அன்றாட வேலைகளை செய்ய புரதம் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நாம் உட்கொள்ளும் உணவில் குறைந்தது 35 கிராம் புரதம் அவசியம் இருக்க வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த புரதச்சத்து தேவைப்படுகிறது.எலும்புகளுக்கு மட்டுமின்றி தலைமுடி,நகம்,தசைகள் என்று அனைத்திற்கும் புரதச்சத்து தேவைப்படுகிறது.ஆனால் நாம் இட்லி,தோசை,பூரி,பொங்கல்,சப்பாத்தி போன்ற உணவுகளை மட்டுமே அதிகம் சாப்பிடுகின்றோம்.இதில் நமது உடலுக்கு தேவைப்படும் புரதச்சத்து இருப்பதில்லை.

புரதம் இல்லாத உணவுகளை சாப்பிட்டால் நமது உடலுக்கு தேவையான புரதத்தை எலும்புகள் கொடுக்க நேரிடுகிறது.இதன் காரணமாக நமது எலும்பு எலும்புகள் சீக்கிரம் பலவீனமடைந்துவிடுகிறது.இட்லி,சப்பாத்தி போன்றவை நல்ல உணவுகள் என்றாலும் நமக்கு புரதம் அவசியம் என்பதால் பிராய்லர் கோழி இறைச்சியை உட்கொள்ளலாம்.இந்த கோழியில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது.

அதேபோல் முட்டை,பால் மற்றும் பால் பொருட்கள்,இறைச்சி,சால்மன் மீன்,பாதாம் பருப்பு,வேர்க்கடலை,முழு தானிய உணவுகள்,பருப்பு,பீன்ஸ்,கொண்டைக்கடலை போன்றவற்றில் அதிக புரதம் நிறைந்து காணப்படுகிறது.காராமணி ஆகியவற்றில் புரதம் நிறைந்து காணப்படுகிறது.இதுபோன்ற உணவுகளை நம் தினசரி வாழ்வில் அவசியம் உட்கொள்ள வேண்டும்.