“வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கு ஏற்ப மோடி செய்த காரியம்!
கொரோனா தொற்றானது ஓராண்டு கடந்த நிலையிலும் கட்டுக்குள் அடங்காமல் பரவி தான் வருகிறது.தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில்,சில கட்சி வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அதிலும் திமுக எம்.பி மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கும் கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தங்களது பரப்புரையை நடத்தினர்.அதனைத்தொடர்ந்து திமுக காங்கிரஸ்-வுடன் தனது கூட்டணியை வைத்துக்கொண்டு தங்களது பரப்புரையை நடத்தியது.அப்போது அதிக அளவு கொரோனா பாதுகாப்புடன் இருந்து பரப்புரை நடத்தியிருந்தாலும் சில மூத்த தலைவர்களுக்கே கொரோனா தொற்றானது உறுதியானது.
அதுமட்டுமின்றி பல விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள்,தொழிலதிபர்கள் என பிரபலமடைந்த அனைவருக்கும் இந்த கொரோனா தொற்றானது உடனுக்குடனே பரவி வருகிறது.அந்தவகையில் ஹாலிவுட் நடிகர் மற்று நடிகையான அக்ஷை குமார் மற்றும் ஆலியாபட்-க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் கிரிக்கெட் ஐபிஎல் மேட்ச்-க்கு என்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.முதலில் களத்தில் இறங்கும் அணிகளான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளின் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது.அவர்கள் தங்களை வீட்டினுள்ளே தனிமை படுத்திக் கொண்டுள்ளனர்.அந்தவகையில் பல இடங்களில் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி தனக்கும் கொரோனா வந்துவிட கூடாது என்பதற்காக “வருமுன் காப்பதே சிறந்தது” என்பதற்கினங்க முன் எச்சரிக்கையாய் 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
இவர் மார்ச் 1-ம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை முதலில் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிட தக்கது.தற்போது 2 வது டோஸ் தடுப்பூசியும் எய்ம்ஸ் மருத்துவமையில் செலுத்திக்கொண்டர்.அதுமட்டுமின்றி அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார்.