நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிக பயங்கரமாக பரவி வந்தது. இந்த நிலையில், பல மாநிலங்களுக்கு ஊரடங்குகள் போடப்பட்டது. மேலும், தமிழ் நாட்டில் முன்பே போடப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் நடந்து முடிய உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை இயங்க தடை தொடர்கிறது என்றும், நீச்சல் குளங்கள் பொதுமக்கள் கலந்து ஆலோசனை செய்யும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு போக்குவரத்துக்கான தடையும் தொடர்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர அனைத்து சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இவற்றைத் தவிர கூடுதலாக சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலை வாய்ப்பினை கருத்தில் கொண்டு அனைத்து விதமான தொழில் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள், 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா வைரஸ் தொற்றின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களின் சேர்க்கை, பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளும் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் புத்தக வினியோகம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் சில தளர்வுகளுடன் மட்டுமே ஜூலை 31-ஆம் தேதி வரை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.