தலைக்கு குளிக்கும் பொழுது என்னென்ன செய்ய வேண்டும்!!? இது நம்ம லிஸ்ட்லயே இல்லயேப்பா!!!
நாம் பொதுவாக தலைக்கு குளிக்கும் பொழுது செய்ய வேண்டிய சில முக்கியமான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக குளிப்பது என்பது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் நன்மை அளிக்கும் ஒரு செயல்முறையாகும். குளிப்பதால் நம் உடலில் உள்ள அழுக்குகள் மட்டும் உடலை விட்டு வெளியேறுவது இல்லை. நம்முடைய உடலில் உள்ள சர்வீஸ் நீங்குகின்றது. மேலும் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கவும் நாம் குளிக்க வேண்டும்.
சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். ஒரு சிலர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கின் அடிப்படையிலும் ஒரு சிலர் இரண்டு தினங்களுக்கு ஒரு முறை என்றும் மற்றும் ஒரு சிலர் வாரத்திற்கு ஒரு முறை என்றும் தலைக்கு குளிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அவ்வாறு தினமுமோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ தலைக்கு குளிக்கும் பொழுது நாம் ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
தலைக்கு குளிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…
* நாம் தலைக்கு குளிக்கப் போகும் பொழுது காய்ந்த தலையில் அப்படியே தண்ணீர் ஊற்றி விடக் கூடாது. சிறிதளவு எண்ணெய் வைத்து அதன் பின்னர் தலையில் தண்ணீர் ஊற்றலாம்.
* தலைக்கு குளிக்கும் பொழுது மிதமான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும்.
* ஷாம்பு பயன்படுத்தும் பொழுது அப்படியே தலையில் ஷாம்பு கொட்டி தேய்க்கக் கூடாது. சிறிதளவு தண்ணீரில் ஷாம்புவை கரைத்து அதன் பின்னர் தலையில் தேய்க்க வேண்டும்.
* நாம் தலைக்கு குளிக்கும் பொழுது முதலில் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும்.
* நாம் தலைக்கு குளிக்கும் பொழுது தலையை கீழ் நோக்கி வைத்தவாறு குளிக்க வேண்டும். ஏன் என்றால் தலையை மேல் நோக்கி வைத்தவாறு குளிக்கும். பொழுது முடியின் வேர்கால்கள் பலமற்று பேய் விடுகின்றது.
* பெண்கள் தலைக்கு குளித்து முடித்த பின்னர் ஈரமான முடி தலையில் உள்ள உச்சியில் வருமாறு கொண்டை போட வேண்டும். முடியை பின்னோக்கி சுழற்றி கொண்டு போடக் கூடாது.
* ஈரமான முடியை எப்படியாவது 15 நிமிடத்திற்குள் காய வைக்க வேண்டும். ஈரமான முடியுடன் தலையில் கொண்டையுடன் நீண்ட நேரம் பணிகள் செய்து கொண்டிருந்தால் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும்.
* பெண்கள் தலைக்கு குளித்து முடித்த பின்னர் ஈரமாக இருக்கும் முடியை துண்டால் அடித்து துடைக்கக் கூடாது. அதற்கு பதிலா கைகளை பயன்படுத்தி சிக்கெடுத்து காய வைக்க வேண்டும்.
* தலைக்கு குளித்து தலைமுடி காய்ந்த பிறகு தலைமுடியை விரித்து போட்டபடி இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அது தலைமுடியை கரடுமுரடாக மாற்றும்.