நல்ல தூக்கத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக் கூடாது?

ஒவ்வொருவருக்கும் தூக்கம் அவசியமான விஷயமாக இருக்கிறது.நல்ல தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்றால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நாம் ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.தூங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது உடல் இயங்க வேண்டிய நேரத்தில் தூங்குவது என்று தங்கள் வாழ்க்கைமுறையை தவறாக மாற்றிவருகின்றனர்.

தூக்கம் நமது கழிவுகளை வெளியேற்றும் என்றால் நம்ப முடிகிறதா? காலையில் எழுந்ததும் வாயில் துர்நாற்றம் வீசுதல்,சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்,கண்களில் இருந்து அழுக்கு வெளியேறுதல் போன்றவை நடந்தால் அது நல்ல விஷயம்.இது நமது உடல் கழிவுகளை வெளியேற்ற ஒரு வழியாகும்.

நாம் நல்ல தூக்கத்தை அனுபவிக்கவிட்டால் கழிவுகள் உடலில் தேங்கிவிடும்.எனவே நல்ல தூக்கத்தை அனுபவிக்க இரவில் நீங்கள் சில விஷயங்களை அவசியம் செய்ய வேண்டும்.இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.அதிகளவு தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.இதனால் தூக்கத்தை இழக்க நேரிடும்.

சூடான பானங்கள்,காஃபின் பானங்களை தவிர்க்க வேண்டும்.தூங்குவதற்கு முன்னர் உடலுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும்.அதிகம் யோசிப்பதை தவிர்க்க வேண்டும்.வெளிச்சம் குறைவான இடத்தில்தான் உறங்க வேண்டும்.

மொபைல் பார்ப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.இரவு நேரத்தில் அளவாக உட்கொள்ள வேண்டும்.முடிந்தவரை 7 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது.அதேபோல் காலையில் எழுந்ததும் உடலில் சூரிய வெளிச்சம் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் இரவு முழுவதும் உறக்க நிலையில் இருக்கும்.இதனால் காலையில் அதை தட்டி எழுப்ப உடலில் சூரிய ஒளி படும்படி நாம் சிறிது நேரம் நடக்க வேண்டும்.