சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Photo of author

By Divya

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

ஜென்ம சனி, 7 1/2 சனி, அஷ்டம சனி, கண்ட சனி உள்ளவர்களும் இந்த பரிகாரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமை காலை நேரத்தில் உளுந்து பருப்பை மூன்று முறை தலையை சுற்றி காகங்களுக்கு அதை போட வேண்டும்.

இதை தொடர்ந்து 7 சனிக்கிழமைகளில் செய்து வர சனி தோஷம், பாதிப்பு குறையும்.

சனிக்கிழமை அன்று காகத்திற்கு சாதம், தயிர், எள் கலந்து உணவளிக்க பாதிப்புகள் நீங்கும்.

சனிக்கிழமை தோறும் சிவன் கோயிலில் 3 நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வழிபட விரைவில் பலன் அளிக்கும்.

மார்க்கண்டேயன் சிவனை பிடித்து கொண்டதால் மரணத்தில் இருந்து தப்பித்து கொண்டார். அதுபோல் நாமும் அவரை இறுக பற்றிக் கொள்ள வேண்டும்.

தான தர்மங்கள் செய்ய சனி பகவான் மனம் இறங்குவார். இதில் எதை வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படி செய்யலாம். இவ்வாறு செய்தால் ஜென்ம சனி, 7 1/2 சனி, அஷ்டம சனி, கண்ட சனி உள்ளிட்ட அனைத்தும் நீங்கும்.