பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!

சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவர் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் விடிய விடிய மது அருந்தியதால் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவரின் மகன் ஸ்டீபன் என்பவர்.இவரது மனைவி சுஜிதா பிரசவத்திற்காக வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தார் வடபழனியில் இருந்தனர்.

இந்நிலையில் சுரேஷ்குமார் மட்டும் அவரது வீட்டில் இருந்துள்ளார்.இன்று அதிகாலையில் அவரது வீட்டில்லிருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சூளைமேடு காவல்துறையினர் சுரேஷ்குமாரின் வீட்டை பார்வையிட்டனர்.அப்பொழுது சுரேஷ்குமாரின் அரை முழுவதும் எரிந்து தீயில் கருகி சுரேஷ்குமார் உயிரிழந்ததும் தெரிய வந்தது
பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் விடிய விடிய அளவுக்கு அதிகமாக மது அருந்தியதுடன் சிகரட்டை பிடித்து விட்டு அணைக்காமல் போட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.புகைத்து விட்டு அணைக்காமல் போட்ட சிகரெட்டினால் அறை முழுவதும் தீ பற்றிருக்கலாம் எனவும் காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

தொழிலதிபர் மின் கசிவு காரணமாக இறந்தாரா? இல்லை அணைக்காமல் போட்ட சிகரெட்டினால் அறை முழுவதும் தீ பற்றி இறந்தாரா? என்பதனை அறிய தடவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.

Leave a Comment