ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ!

Photo of author

By Parthipan K

ஆபத்தை உணராமல் டிரைவர் செய்த காரியம் ! ஏரில் பறந்த ஆட்டோ!

மும்பை அருகே விரார் பகுதியில் உள்ள மும்பை ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் அமைந்துள்ளது . அந்த நடைமேம்பாலத்தில்  தினம்தோறும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம் . அந்த பகுதியில் மக்கள் அதிகள் சென்று வருவதால் பயணிகள் செல்ல வசதியாக இருக்க படிக்கட்டுகள் வைக்காமல் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சாய்வு பாதையை புத்திசாலித்தனம்மாக பயன்படுத்தி கொண்ட   ஆட்டோ டிரைவர் நெடுஞ்சாலையை கடக்க வேண்டும் என நடைமேம்பாலம்த்தில் ஆட்டோவை ஏற்றி சென்றுள்ளார். அதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆபத்தை உணராத ஆட்டோ டிரைவர் மீது நெட்டிசன்கள்  கடும் கன்னடம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த ஆட்டோ டிரைவர் தலை மறைவு ஆகிவிட்டதால் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.