பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!!

0
147
What the mother did because of the birth of a girl!! Father's action in shock!!
What the mother did because of the birth of a girl!! Father's action in shock!!

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!!

கராமி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்துள்ளார். இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்தது. முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன வருத்தம் அடைந்துள்ளார்.

எனவே குழந்தையை விற்க முயற்சி செய்து வந்துள்ளார். பிறகு பிப்ரசரன்பூர் கிராமத்தைச் சேர்ந்த புலாமனி மற்றும் மராண்டி என்ற தம்பதிகளுக்கு தனது குழந்தையை கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக அவர்களிடமிருந்து 800 ரூபாய் தொகையையும் வாங்கி உள்ளார்.

வீட்டிற்கு அருகே வசிப்பவர்கள் குழந்தை எங்கே என்று கேட்டதற்கு இறந்து விட்டதாக பொய் கூறி உள்ளார். இதனையடுத்து கராமியின் கணவர் முசு முர்மு தமிழ்நாட்டில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இரண்டாவது குழந்தை எங்கே என்று கேட்டதற்கு நமது குழந்தை இறந்து விட்டதாக கராமி கூறி உள்ளார். கராமி கூறியதை முர்முவால் நம்ப முடியவில்லை.

இதனையடுத்து சில நாட்களுக்கு பிறகு அயலார் ஒருவர் குழந்தை நன்றாகத்தான் இருந்தது என்றும், சந்தைக்குச் சென்று விட்டு கராமி வீடு திரும்பும் போது அவளிடம் குழந்தை இல்லை என்றும் கூறி உள்ளார்.

இதைக்கேட்ட முர்மு காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். எனவே காவல் துறையினர் முர்முவின் மனைவி கராமியை கைது செய்து குழந்தை பற்றிய தகவலை விசாரித்தனர்.

அப்பொழுது அவர் குழந்தையை விற்றது தெரிய வந்தது. காவல் துறையினர் குழந்தையை தேடி கண்டுப்பிடித்து குழந்தை காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleவருமானம் வரி தாக்கல் ஜூலை 31 கடைசி நாள்!! ஐடிஆர் அதிரடி அறிவிப்பு!!
Next articleஅரசு மருத்துவமனைகளில் இனிமேல் இவ்வாறு தான் இருக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!