NPS திட்டம்: நாமினியை சேர்க்காமல் NPS சந்தாதாரர் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

Photo of author

By Savitha

NPS திட்டம்: நாமினியை சேர்க்காமல் NPS சந்தாதாரர் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

Savitha

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய சான்றிதழை (NPS)ஐ ஒழுங்குபடுத்துகிறது. PFRDA ஆனது NPS சந்தாதாரர்களை அவர்களது கணக்கில் நாமினியைச் சேர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பல நேரங்களில் சந்தாதாரர்கள் நாமினியைச் சேர்க்காமலேயே இறந்து போகின்றனர். இவ்வாறு NPS சந்தாதாரர் ஒரு நாமினியைச் சேர்க்காமல் இறந்துவிடும் சூழ்நிலையில், நாமினியாக யாரையாவது நியமிக்க முடியுமா என்கிற கேள்வி பலருக்கு எழுவது பொதுவான ஒன்றுதான். கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று PFRDA இதுகுறித்து ஒரு தெளிவான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் நாமினியை நியமிக்கும் உரிமை NPS சந்தாதாரருக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஒரு NPS கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு, அவரது விவரங்களைப் பயன்படுத்தி கணக்கில் உள்நுழைந்து, நாமினி விவரங்களை மாற்ற யாராவது முயற்சி செய்தால் அது செல்லாது. முயன்றால், அத்தகைய சூழ்நிலையில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் செல்லாது என்றும் NPS சந்தாதாரர் உயிருடன் இருக்கும்போது அவரது அனுமதியின் பெயரிலேயே நாமினியை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இப்போது ஒரு NPS சந்தாதாரர் நாமினியைச் சேர்க்காமல் இறந்துவிட்டால், அவரது சட்டப்பூர்வ வாரிசு மட்டுமே உரிமைகோரலைப் பெற முடியும். இதற்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுச் சான்றிதழை வருவாய்த் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு சரிபார்ப்பு செயல்முறை நிறைவடைந்ததும் சந்தாதாரர் NPS திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் முழுவதும் சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.