விநாயகர் சதுர்த்தி அன்று மஞ்சள் பிடித்த பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?

Photo of author

By Kowsalya

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி நாளை, ‘விநாயகர் சதுர்த்தி’யாகக் கொண்டாடுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, பூஜையறையில் கோலமிட வேண்டும். விநாயகர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, அதன் முன்பாக வாழை இலை ஒன்றை விரித்து வைக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, பச்சரிசியின் மீது களிமண்ணால் செய்த பிள்ளையாரை அருகம்புல் மாலை செய்து பிள்ளையாருக்கு அணிவித்து வணங்குவது வழக்கம்.

ஆனால் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்க இயலாதவர்கள் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வணங்குவார்கள்.

நீக்கமற அனைத்து இடத்திலும் நிரம்பியிருக்கும் விநாயகரை எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம்.

எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்? பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை அடுத்த நாள் என்ன செய்வது என்று ஒரு குழப்பம் இருக்கும். அதற்கான தீர்வுதான் இது!

விநாயகர் சதுர்த்தியன்று வெற்றிலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்குவார்கள்.

அடுத்தநாள் சுமங்கலிகள் தங்களுடைய தாலிக்கயிற்றில் மஞ்சளை தேய்த்து மற்றும் முகத்தில் பூசிக் குளித்தால் மிகமிக சுபிட்சம் ஆகும்.

குளிக்கும் பொழுது அந்த மஞ்சளை தண்ணீரில் கொஞ்சம் கலந்து குளித்து வந்தால் சகல தோஷங்களும் நீங்குமாம்.

ஒரு சிறிய சொம்பில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் பிள்ளையாரை கரைத்து வீடு முழுவதும் வீடு சுற்றிலும் தெளித்து வர வீட்டை சுற்றியுள்ள பாவங்கள், ஏவல்கள், பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது.

தடையில்லாத காரியங்கள் வெற்றி பெற விநாயகரை வணங்குங்கள்.