ரசிகர்களை சந்தோஷப்படுத்த விஜய் சேதுபதி செய்த சம்பவம்!! குவிந்த பாராட்டுகள்!!

Photo of author

By Parthipan K

ரசிகர்களை சந்தோஷப்படுத்த விஜய் சேதுபதி செய்த சம்பவம்!! குவிந்த பாராட்டுகள்!!

நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும்.

ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி இப்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார். மேலும் இவர் தற்பொழுது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகின்றார்.

அந்த வகையில் அவர் தன் ரசிகர்களிடம் மிகவும் அன்பாகவும் ,கனிவாகவும் நடந்து கொள்ளவார்.அதற்கு உதாரணமாக சமூகவலைத்தளத்தில் வெளியான பல வீடியோக்களை பார்க்கலாம்.

விஜய் சேதுபதியின் குணத்தை மற்றும் அவர் தன் ரசிகர்களிடம் மிகவும் எளிமையாக பழகுவார் என்பதை உறுதிபடுத்தும் விதமாக தற்பொழுது ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

அந்த வகையில் அவர் படபிடிப்பிற்கு  சென்ற இடத்தில் சினிமா நடிகர்களுக்கு என்று கேரவன் முன் ஒரு பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. அந்த வரிசையை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி அங்க உள்ளவரிடம் என்னவென்று விசாரித்துள்ளார்.

அங்குள்ள அனைவரும் தன்னிடம் செல்பி எடுக்க வந்திருப்பதை அறிந்த நடிகர் விஜய் சேதுபதி அனைவரையும் அழைத்து அவர்கள் வைத்திருந்த மொபைல் போனை வாங்கி செல்பி எடுத்து குடுத்துள்ளார்.

இவர் அந்த நேரத்தில் தனது ரசிகர்களிடம் மிக கனிவுடனும் மதிக்க தக்க குணத்துடனும் நடந்து கொண்டுள்ளார்.அங்குவந்த அவரது ரசிகர்கள் அனைவரையும்  மிக சந்தோஷத்துடன் அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.