இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்திய அணி. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் வெற்றி என்ற நிலையில் ஒரு போட்டியில் மட்டும் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்த போட்டிக்கு பின் பலரும் ரோஹித் மற்றும் விராட் குறித்து பலவிதமான விமர்சனங்கள் தெரிவித்து வந்த நிலையில் கவாஸ்கர் கோலி யை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், விராட் கோலி தொடர்ந்து அனைத்து போட்டிகளில் ஒரே விதமாக விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இவ்வாறு ஒருவர் சரியான ஆட்டத்தை விளையாடாத போது களத்தில் இப்படி நடந்து கொள்வது சரியில்லை.
இளம் வயது வீரரை சீண்டியது ரசிக்கத்தக்க வகையில் இல்லை. இந்திய அணி வீரர்களுக்கு பதிலடி கொடுத்து தான் பழக்கம் ஆனால் அதற்காக அப்படி நடந்து கொண்டது சரியில்லை. மேலும் அவர் ஒரு இன்னிங்சில் சதம் அடித்தாலும், ஒரே ஷாட் அடிக்க முயன்று அவர் விக்கெட்டை பறிகொடுத்தது அவருக்கு சிக்கலான ஒன்று இது அணிக்குதான் நெருக்கடியை கொடுக்கும். னவே அவர் அதனை மாற்றி கொள்ள வேண்டும்.