இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதற்கு காரணமாக இந்திய அணியில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பகுதி நேர பவுலர் நிதீஷ் ரெட்டி கூட 1 விக்கெட் எடுத்தார் ஆனால் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் திணறினார். அதுமட்டுமல்லாமல் மொத்தமாக 16 ஓவர்கள் வீசி 86 ரன்கள் கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை பந்து வீச்சாளர் விக்கெட் எடுக்க முடியவில்லை என்றாலும் ரன்கள் கொடுக்காமல் இருக்க வேண்டும்.
ஆனால் இவர் ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து முகமது ஷாமி அணியில் இடம் பெறுவார் என கூறி வந்த நிலையில் அவர் அணியில் உண்மையில் இடம் பெறுவாரா? என கேள்வி எழுப்பி வரும் நிலையில் என் சி ஏ தரப்பில் கூறப்பட்டதாவது அவர் ஓராண்டு காலமாக ஓய்வில் இருந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு தகுதி பெறவில்லை என்றும் அவர் டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.