வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!!
1)என்னதான் பணக் கஷ்டம் இருந்தாலும் சேமிக்க முடியாமல் போனாலும் என்னால் பணம் சேமிக்க முடியவில்லை என்று சொல்லி நம்முடைய பனக் கஷ்டத்தை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. சம்பளப் பணம் வந்ததும் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்று புலம்பக் கூடாது. இவ்வாறு செய்வதால் நமக்கு பணம் சேமிப்பதற்கான நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
எதிர்மறை எண்ணங்கள் மட்டும் தான் நம் மனதில் இருக்கும். இதனால் பணம் சேமிக்க வழி இருந்தும் அவை நமக்கு தெரியாமல் போய்விடும்.
2)சம்பளப் பணம் வந்ததும் அதில் இருந்து சிறுத் தொகையை உண்டியல் அல்லது வங்கி கணக்கில் போட்டு வைப்பதை அவசியம் பின்பற்ற வேண்டும். இப்படி சேமிக்க ஆரமித்து விடீர்கள் என்றால் எக்காரணம் கொண்டும் அதை இடையில் எடுக்கக் கூடாது.
3)வரவு, செலவு எழுத்துவதற்காக ஒரு பட்ஜெட் நோட் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செலவுகளையும் மறக்காமல் எழுதி வைக்க வேண்டும். அதேபோல் என்ன செலவு செய்ய போகிறோம்? எவை முக்கியமான செலவு? இந்த செலவு செய்வதால் பயன் உண்டா? என்பதை ஆராய்ந்து முடிவெடுத்து பின்னர் எழுதி வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை தவிர்த்து அதிக பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
4)நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் ஏதேனும் பொருட்களை வாங்குவதை நம்மிடம் பகிரும் பொழுது அதை நாமும் வாங்க வேண்டும் என்று யோசிக்க கூடாது.
நமக்கு தேவைப்படாத ஆடம்பர பொருட்களை நாம் வாங்கும் பொழுது நம்முடைய பணம் கரைய ஆரமித்து விடும். இதனால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடும். இவ்வாறு பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கத் தொடங்கினால் கடனில் சிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
5)நாம் ஒரு பொருளை வாங்குவதற்கு முன் நன்றாக யோசித்து பார்த்து வாங்க வேண்டும். இது தேவையான ஒன்றா? என்று யோசித்து விட்டு வாங்க முடிவு செய்து விட்டால் நாம் அந்த பொருளுக்காக செலவழிக்க உள்ள பணத்தில் சிறிதளவு எடுத்து வைத்து விட்டு செலவு செய்வது நல்லது. இதன் மூலம் பணமும் சேமித்து பொருளையும் வாங்க முடியும்.