கல்வி நிதி ஒதுக்கீடில் ஆரம்பத்திலிருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு விதமான போர் நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அதாவது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதி ஒதுக்கீடு 2000 கோடியை வழங்க முடியும் எனவும் முன்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் ஏன் தமிழகத்தால் இதனை ஏற்க முடியவில்லை எனவும் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கல்விக் கொள்கையை வைத்து மாநில அரசுதான் அரசியல் செய்கிறது என்றும் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் உடைய பேச்சுக்கு தன்னுடைய X தள பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்த பதிலாவது :-
அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு வர வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் கூறுவது ஏற்க முடியாததாகும் என்றும் மாநிலங்கள் இணைந்து தான் ஒன்றிய அரசே தவிர ஒன்றிய அரசு அனைத்திற்கும் எஜமானாக உரிமை கோரிவிட முடியாது என தெரிவித்திருக்கிறார்.
மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே சட்டப்படி 2000 கோடி ரூபாய் கல்வி நிதி உதவி ஆனது தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதோடு மட்டுமின்றி மீண்டும் மொழிப்போர் ஆனது தமிழகத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் துவங்கிவிட்டது எனவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.