பிறப்புச் சான்றிதழ் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது!! உயர் நீதிமன்றம் சென்ற விஏஓ!!

Photo of author

By Gayathri

பிறப்புச் சான்றிதழ் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது!! உயர் நீதிமன்றம் சென்ற விஏஓ!!

Gayathri

What you must know about birth certificates!! VAO goes to the High Court!!

பிறப்பு சான்றிதழில் ஒருவருடைய பிறந்தநாள் சரியாக இருத்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பிறப்பு சான்றிதழில் பிறந்த தேதி எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாம் கல்வி பயிலும் பொழுது அங்கு அந்த தேதி சரியாக குறிப்பிடப்படுவதும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் ஏற்பட்ட சிக்கலை நீதிமன்றம் வரை சென்று அரசு ஊழியர் சரி செய்து இருப்பது தற்போது பேச்சு பொருளாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த வி.இ.ஓ மார்க்கண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 20.03.1983 அன்று கிராம தலையாரி பணிகள் தான் நியமிக்கப்பட்டதாகவும் தன்னுடைய வயது சான்றுக்காக பள்ளி மாற்று சான்றிதழை ஒப்புதல் ஆவணமாக சமர்ப்பித்ததாகவும் ஆனால் அதில் குறிப்பிட்டு இருந்த பிறந்த தேதிக்கு பதிலாக வேறொரு தேதியை தன்னுடைய பணி பதிவேட்டல் மாற்றி எழுதி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது தனக்கு 2015 ஆம் ஆண்டில் தான் தெரியும் என்றும் அது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாகவும் கூறியதோடு 2016 ஆம் ஆண்டில் கிராம நிர்வாக அதிகாரியாக தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது என்றும் அப்பொழுது பிறந்த தேதி காரணமாக தனக்கு பதவி உயர்வை உயரதிகாரிகள் நிராகரித்து இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கினை மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்து, மனுதாரர் 01.02.2018 முதல் 18.03.2019 வரை பணியாற்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றாலும் அவர் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவர் கூறிய பளபலன்களை பெற தகுதியானவர் என அவருடைய வக்கீல் ஆர் கருணாநிதி ஆஜராகி வாதாடிய நிலையில், நீதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டு மனுதாரருக்கு உரிய பணபலன்களை நாலு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.